சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பள்ளி மாணவர்களை எட்டி உதைத்த உடற்பயிற்சி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்து சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஓமலூர் அருகே கொளத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் அண்ணாமலை எட்டி உதைத்துள்ளார். கால்பந்து போட்டியில் தோற்றதால் மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை எட்டி உதைக்கும் வீடியோ வெளியானது .