சென்னை: குவாகாத்தியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக சென்னை வந்தது. எரிபொருள் குறைந்ததால் சென்னை வர வேண்டிய விமானம் பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.குவாகாத்தியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென எரிபொருள் குறைந்தது. எரிபொருள் குறைவாக இருந்தது விமானிக்கு தெரிய வந்ததை அடுத்து பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கினார். 7.45க்கு வரவேண்டிய விமானம் பெங்களூருவில் எரிபொருள் நிரப்பிய பிறகு புறப்பட்ட நிலையில் இரவு 10.30க்கு வந்தடைந்தது.
குவாகாத்தியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாக சென்னை வந்தது
0