பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதிகளில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பல்வேறு போதைபொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக வடக்கு மண்டல காவல்துறை இணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை மற்றும் கொடுங்கையூர் போலீசார் நேற்று முன்தினம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், பத்மாவதி தெரு பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது, 130 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கொடுங்கையூர், எழில் நகர், 2வது தெருவை சேர்ந்த செல்லப்பா (58) என்ற வியாபாரியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே 6 குட்கா வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.