சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சேப்பங்குளப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(55). விவசாயியான அவர் தனது தோட்டத்தில் பயிர்களை மேய வரும் விலங்குகளை விரட்ட நாட்டு துப்பர்க்கியுடன் நேற்று அதிகாலை சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக அவரது கை ட்ரிக்கரில் பட்டதில் வெளியேறிய குண்டு, சுப்பிரமணியின் வலது காலில் பாய்ந்து படுகாயமடைந்தார். எருமப்பட்டி போலீசார் அவரது நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.