கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அதிமுக மாவட்ட நிர்வாகி முல்லைவேந்தன் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி ஒன்றியச் செயலாளர், கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி அதிமுக நிர்வாகி ஏழுமலை, ஆரோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஜெயலலிதா உருவ படத்திற்கு மரியாதை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
கும்மிடிப்பூண்டி பஜாரில் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் எஸ்.டி.டி.ரவி ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், ஓடை ராஜேந்திரன், எம்எம்எஸ் சரவணன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் இமயம் மனோஜ், மாணவரணி துணைச் செயலாளர் முனுசாமி நகர் சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுனியம் பலராமன், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பங்கேற்று ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின் கும்மிடிப்பூண்டி பஜாரில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரையில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்டச் செயலாளர் மகேந்திரன் ஏற்பாட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. புதுகும்மிடிப்பூண்டியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கந்தசாமி நினைவு சிலை பகுதியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணபதி ஏற்பாட்டிலும், முன்னாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
* ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் கச்சூர், சீத்தஞ்சேரி, ஆட்ரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றியச் செயலாளர் பிரசாத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தசாமி, செஞ்சய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் கலந்துகொண்டு, ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு, அன்னதானம் வழங்கினார். இதேபோல் ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தில் கிளைச்செயலாளர் விமல் தலைமையில் நிர்வாகிகள் கோதண்டன், பழனி முன்னிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர் சிறுனியம் பலராமன், முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், பூண்டி ஒன்றியச் செயலாளர் பிரசாத் ஆகியோர் பிரியாணி வழங்கினர்.
ஊத்துக்கோட்டையில் அமமுக சார்பில், பேரூர் செயலாளர் சரவணன் தலைமையில், அரசுப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் உதயகுமார், பேரூர் கழக பொருளாளர் பஷீர் பாஷா, துணை செயலாளர் அமானுல்லா, கிளை செயலாளர்கள் மகபூப்ஹுசைன், முருகேசன், சேகர், செல்லா, நாகராஜ், சுபாஷ், தேவன், திருநாவுக்கரசு, ஜோதி, ராணி, பப்பி, சித்ரா, அனிதா, செல்வம், தெனாலி, ராமு, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.