கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் நடந்த ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் துவக்க விழாவில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்றார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயில் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.வேளாண் உதவி இயக்குநர் இ.டில்லிகுமார் தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரதீப் முன்னிலை வகித்தனர்.விழாவில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் திட்ட விளக்க உரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் துவக்கி வைத்து பேசுகையில் ‘இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டுமே வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட்டை செயல்படுத்தி இருக்கிறது. விவசாயிகளின் நலனிற்காக தமிழக அரசு பல நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என்றார்.தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவசமாக காய்கறி விதைகள் மற்றும் பழம் மரக்கன்றுகளை வழங்கினார்.முன்னதாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த உரம் விதைகள் கண்காட்சியை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பார்வையிட்டார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.