கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தெற்கு கிழக்கு மேற்கு பேரூர் ஒன்றிய திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற இலக்கினை முன்வைத்து புதுவாயிலில் திமுக உறுப்பினர் சேர்க்கை நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் திருமலை ஒன்றிய நிர்வாகி வெங்கடேசன் சுரேஷ் இளைஞர் அணி நிர்வாகிகள் சுரேஷ் தியாகராஜன் விஜயகுமார் ராஜேஷ் கிளை செயலாளர் சேகர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் ராஜ் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்க மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வீடு வீடாக சென்று திமுகவின் சாதனைகள் குறித்து பேசினர். குடும்பத்தினரிடம் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டும் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் திமுக அரசிற்கு உறுதுணையாக இருக்க விருப்பம் தெரிவித்தவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதில் திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர் ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் திமுக செயலாளர் அறிவழகன் கவுன்சிலர்கள் குப்பன் அப்துல் கரீம் திமுக இளைஞரணி செயலாளர் சான்டில்யன் முன்னிலையில் நடந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று தமிழக அரசின் சார்பில் தரப்படும் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் எடுத்துக் கூறியும் திமுகவில் இணைய விருப்பமா என கேட்டு அவர்களை திமுகவில் உறுப்பினராக சேர்த்து அவர்களிடம் திமுக அரசின் சாதனைகள் குறித்த புத்தகத்தை வழங்கினார். இதேபோல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நா.பரிமளம் ஐடிவிங் தொகுதி பொறுப்பாளர் சரத்குமார் முன்னிலையில் மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன் முன்னிலையிலும் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.