தாஹோத்: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.71கோடி ஊழல் வழக்கில் குஜராத் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்காக 2021ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டுக்கு இடையில் 35 நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து போலி வேலை நிறைவு சான்றிதழ்கள் மற்றும் பிற ஆதாரங்களை தயாரித்து ரூ.71கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குஜராத் பஞ்சாயத்து மற்றும் வேளாண் அமைச்சரான பச்சுபாய் கபாத்தின் மகன் பல்வந்த் கபாத் மற்றும் அப்போதைய தாலுகா மேம்பாட்டு அதிகாரி தர்ஷன் படேல் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.