அகமதாபாத் : குஜராத்தில் கடலோர காவல்படையின் ஏஎல்எச் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. போர்பந்தர் அருகே கடலில் விழுந்த ஹெலிகாப்டரில் 4 பேர் சென்றதாக கடலோர காவல்படையினர் தகவல் அளித்துள்ளனர். காணாமல் போன 3 பேரையும் தேட 4 கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.போர்பந்தர் அருகே கடலில் உள்ள ஹரி லீலா கப்பலில் நோயாளியை மீட்கச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது.