சென்னை : சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை 6 மாதங்களில் 1,000 பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிநவீன வசதிகள் கொண்ட துறையாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை இருதயவியல் துறை திகழ்கிறது. இருதயவியல் துறையில் 6 மாதத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.