நீலகிரி: கூடலூர் அடுத்த பிதர்காடு பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து ஜம்போ மற்றும் கிருஷ்ணா கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. நாளை முதல் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தொடங்கும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
Advertisement


