நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாடந்துறையில் இரிடியம் மோசடி, ஆள் கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாலசுப்பிரமணி என்பவர் தன்னிடம் இரிடியம் இருப்பதாக கூறி கேரளாவைச் சேர்ந்தவர்களிடம் ரூ.5 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார். மோசடி செய்த பாலசுப்ரமணி மற்றும் அவரது மகனை கேரளாவை சேர்ந்த 7பேர் கடத்தியுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் மற்றும் இரிடியம் இருப்பதாக மோசடி செய்த தந்தை, மகன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.