தேவையானப் பொருட்கள்
வடித்த சாதம் – 1 கப்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – 1/4 டீஸ்பூன்
கொய்யா – 2 (பழமாகவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல்)
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து காய்ந்த மிளகாய். உளுத்தம் பருப்பு கடலை பருப்பு வேர்க் கடலை சேர்த்து கிளறவும். பொன்னிறமாக ஆனதும் கொய்யாவை விதைகளை நீக்கிவிட்டு துருவி சேர்க்கவும். கொய்யா வதங்கியதும் வடித்த சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான கொய்யா சோறு தயார்.