கொய்யாப்பழம்-8
நெய்-3 தேக்கரண்டி.
சர்க்கரை-1கப்.
குங்குமப்பூ-சிறிதளவு.
வெள்ளேரி விதை-தேவையான அளவு.
செய்முறை ;
முதலில் 8 கொய்யாப்பழத்தை இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது கொய்யாப்பழத்தின் உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை அப்படியே ஃபேனில் மாற்றிவிட்டு 1 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட்ட பிறகு அடுப்பை ஆன் செய்யவும். நன்றாக வழவழப்பாக வந்ததும் நிறத்திற்கு சிறிது குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு மூன்று தேக்கரண்டி நெய்விட்டு நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். கடைசியாக வெள்ளரி விதைகளை தூவி சுவையான கொய்யாப்பழ அல்வாவை பரிமாறவும்.