சென்னை: தமிழ்நாடு முதல்வர் பேரவையில் அறிவித்ததை செயல்படுத்தும் விதமாக, காவலர்களின் குடும்பத்தைச் சார்ந்த 200 மாணவர்களுக்கு தலா ரூ.30,000 வீதம் 4 வருடங்களுக்கு மொத்தம் ரூ.2.4 கோடியில் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கிடவும், மேலும், காவலர்களின் குழந்தைகளுக்கு கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முறையே முதல் 10 இடங்களைப் பெறும் 460 மாணவ, மாணவியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மொத்த கல்விப் பரிசுத்தொகையை ரூ.28,29,000ல் இருந்து ரூ.56,58,000 ஆக இரட்டிப்பாக்கி வழங்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான கூடுதல் செலவினத்திற்காக, தமிழ்நாடு காவலர் நல நிதிக்கு அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையினை ரூ.1.2 கோடியிலிருந்து ரூ.2,96,58,000 ஆக உயர்த்தியும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.