புதுடெல்லி: கடந்த மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.75 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.1.25 லட்சம் கோடி மற்றும் இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலான ரூ.49,976 அடங்கும். கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் வசூல் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். கடந்த ஜூலையில் ரூ.1.82 லட்சம் கோடி வசூலானது. மாநில அளவில் தமிழ்நாட்டில் கடந்த மாதம் ரூ.10,181 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். இதுபோல் மகாராஷ்டிராவில் ரூ.26,367 கோடி , கர்நாடகாவில் ரூ.12,344 கோடி, டெல்லியில் ரூ.5,635 கோடி வசூலாகியுள்ளது.