புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘8 ஆண்டுகளுக்கு பிறகும் பிரதமர் மோடி அரசின் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் கொண்டுவரப்படவில்லை. இது பொருளாதார அநீதி மற்றும் பெருநிறுவன கூட்டாளித்துவத்தின் ஒரு கொடூரமான கருவியாகும். இது ஏழைகளை தண்டிக்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நசுக்குவதற்கும், மாநிலங்களவையை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், பிரதமரின் சில பில்லியனர் நண்பர்களுக்கு பயனளிக்கவும் வடிவமைக்கப்பட்டது.
ஒரு நல்ல மற்றும் எளிமையான வரிக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, இந்தியாவுக்கு ஒரு கொடுமையான கனவு கிடைத்தது. மேலும் ஐந்து அடுக்கு வரி ஆட்சியில் 900 முறைக்கும் மேல் திருத்தப்பட்டுள்ளது. பாப்கார்ன் மற்றும் கிரீம் பன்கள் கூட அதன் குழப்ப வலையில் சிக்கியுள்ளன. ஜிஎஸ்டி போர்டல் தினசரி துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நிறுவனங்களான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து 18லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.