சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகளுக்கான கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு மற்றம் நடைச் சோதனைக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல், 3 தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைச்சோதனைக்கான நாள் மற்றும் நடைபெறும் இடம் தொடர்பான விபரங்கள் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் அறிவிக்கப்படும். உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைச்சோதனைக்கு அழைக்கப்படும் அனைவரும் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குரூப் 4 பணி தேர்வு பட்டியல் வெளியீடு
0