Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குரூப் 4 பணியில் வனக்காவலர் உள்ளிட்ட பதவிக்கு வரும் 7ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 4) பணிகளில் அடங்கிய வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர்-2 பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஏழாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு வருகிற 7ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ள தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.