சென்னை : குரூப் 2 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது TNPSC. எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் இப்பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ளவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2 தாள்கள் கொண்ட தேர்வாக நடைபெறும் இத்தேர்வில் தாள் ஒன்றில், தமிழ் தகுதி தேர்வு மற்றும் திறனறிவு தேர்வு வரும் நவம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது.