மதுரை: குருப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில், பல தேர்வுகளுக்கு இதுவரை இறுதி விடை குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை. நீதித்துறை தேர்வுகளுக்குக்கூட இறுதி குறிப்புகள் வெளியிடப்படவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.