நன்றி குங்குமம் தோழி
வெந்தயக் கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள் மற்றும் பேதியைக் குறைக்கும். இரும்புச் சத்து நிறைந்தது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.
முருங்கைக்கீரை: அதிக அளவு இரும்புச் சத்து கொண்டது. மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும். இந்தக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இதய நோய்களை தடுக்கலாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும்.
அரைக்கீரை: உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும். தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும். தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சிறுகீரை: குடல் புண்களை நீக்கும். மலச்சிக்கல் குறையும். பித்தத்தை குறைக்கும்.
அகத்திக் கீரை: உடலின் வெப்பத்தை குறைக்கும். பித்தம், தலைச்சுற்று மயக்கத்தை குறைக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். குடற் புழுக்களை அழிக்கும்.
மணத்தக்காளி கீரை: வயிற்றுப் புண்களை போக்கும். குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகளை குறைக்கும்.
பாலக் கீரை: உடலுக்கு வலிமை தரக்கூடியது. மலச்சிக்கலை குறைக்கும்.
புளிச்சக் கீரை: உடலுக்கு வளம் தரக்கூடியது. வயிற்றுக் கடுப்பு, ரத்த பேதி மற்றும் சீதபேதியை குறைக்கும்.
மகிழிக்கீரை: மென்மையான தண்டுகள் கொண்ட இந்தக் கீரையின் இலைகளை பருப்புடன் சமைத்து உண்ணலாம். புண்களை ஆற்றும் தன்மை உடையது. குடல் நச்சுகளை வெளியேற்றுகிறது. இரைப்பை புற்று நோய் வராமல் தடுக்கிறது. பெண்களுக்கு வயிற்று வலி, மாதவிலக்கு தொடர்பான பாதிப்புகளை சரி செய்வதுடன் எலும்புகளுக்கு பலம் தருகிறது.
பசலைக் கீரை: உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. குடல் புண்களை குறைக்கும்.
உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும், வைட்டமின்களும், தாது உப்புக்களும் கீரைகளில் அபரிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம்.
தொகுப்பு:ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.