சென்னை: 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 26 பள்ளிகளுக்கு ரூ.5.20 கோடி நிதி வழங்கப்படும். பள்ளிகளில் ஆற்றல் திறனை மேம்படுத்த சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்படும். மழைநீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி, மூலிகை தோட்டங்கள் உருவாக்கப்படும்
பழம் தரும் மரங்களை நடுதல், நீர் பயன்பாட்டை குறைத்தல், கழிவு நீரை மறுசுழற்சி செய்தல் போன்றவை மேற்கொள்ளப்படும். நெகிழி இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல், ஏனைய பசுமை பணிகளை இப்பள்ளிகள் மேற்கொள்ளும். பள்ளியின் அனைத்து மின் தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.