பச்சைப்பயறு – 1 கப்,
வெங்காயம் – ½ கப்,
தேங்காய் துருவல் – ½ கப்,
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
பூண்டு – 2 பற்கள்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு,
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயம், வேகவைத்த பச்சைப் பயறு சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.தேங்காய்த்துருவல், சீரகம், பூண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கரகரப்பாக அரைத்து கலவையில் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.