தேவையானவை:
முடக்கத்தான் கீரை-கைப்பிடி அளவு,
தோசை மாவு – 1 கப்,
சின்ன வெங்காயம் – 10,
பூண்டு – 4 பல்,
மிளகு – 2 ஸ்பூன்,
சீரகம் – 1 ஸ்பூன்,
இஞ்சி – 1 இஞ்ச்,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – திட்டமாக.
தாளிக்க:
எண்ணெய் – 1 ஸ்பூன்,
கடுகு – ½ ஸ்பூன்,
பெருங்காயப் பொடி – ¼ ஸ்பூன்.
செய்முறை:
முடக்கத்தான் கீரையோடு தோசை மாவு தவிர இதர பொருட்களையும் சேர்த்து எண்ணெயில் வதக்கி, ஆறவிட்டு அரைக்கவும். நைஸாக அரைத்ததும் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவில் கலந்து விட்டு எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து தோசையாக வார்க்க வேண்டும். நாட்டுச் சர்க்கரை அல்லது சட்னி, சாம்பார், இட்லிப் பொடி எது வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.