கிழக்கு ஏஜியன் தீவான சியோஸின் முக்கிய நகரத்திற்கு அருகே பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சியோஸ் நகருக்கு அருகில் பலத்த காற்றினால் தீப்பிழம்புகள் வேகமாக பரவுவதாகவும், இதனால் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டு தீயை அணைத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கிராமவாசிகள் வெளியேறினர்.