திருவில்லிபுத்தூர்: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சதுரகிரி மலைப் பகுதியான பீட் நம்பர் 5ல் ஊஞ்சக்கால் பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து வனத்துறையினர் 15 பேர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அங்கு புல்லுக்கு தீவைத்த தாணிப்பாறை ராம்நகரை சேர்ந்த யானைக்கருப்பன் (60)என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். காட்டுத்தீ எரிவதால் இன்று சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.