Saturday, July 13, 2024
Home » 98 வயதில் ஜிம்னாஸ்டிக்…!

98 வயதில் ஜிம்னாஸ்டிக்…!

by Porselvi

40 வயது கூட தொடவில்லை அதற்குள் 400 விதமான பிரச்னைகள். அந்த அளவிற்கு இப்போதைய உடலமைப்பில் ஏராளமான பிரச்னைகள் வந்துவிடுகின்றன. ஆனால் ஜெர்மனைச் சேர்ந்த 98 வயதான ஜோஹன்னா அசால்ட்டாக ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஆனந்த் மஹெந்திரா. பலரும் ஆச்சர்யத்துடன் அந்த வீடியோவிற்கு கமெண்டுகள் கொடுத்து பகிர்ந்து வருகிறார்கள். ஜெர்மன், ஹொஹென்மோல்செனில் பிறந்தவர் ஜோஹன்னா. தனது 10 வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக்ஸில் ஆர்வமுடன் பயிற்சி பெற்றிருக்கிறார். கடந்த 2012ஆம் ஆண்டில், உலகின் மிக வயதான ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை என்ற பட்டத்திற்கான கின்னஸ் உலக சாதனையை பெற்றார். அப்போது இவருக்கு 86 வயது. 12 ஆண்டுகள் கழித்தும்கூட இவர் முன்பை போலவே படு ஃபிட்டாக, அதே சமயம் ஜிம்னாஸ்டிக் செய்வதற்கேற்ப உடல் அமைப்புடனும் , உறுதியாகவும் செயல்பட்டு வருவது உண்மையில் உலகையே வியக்க வைக்கிறது. இந்த வயதிலும் கூட ஜோஹன்னா குவாஸ் தினமும் பயிற்சி செய்வதுடன், ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட்டு வருகிறார், “என் முகம் வயதாக இருக்கலாம், ஆனால் என் இதயம் இன்னும் புதிய உற்சாகத்துடன் இருக்கிறது” என்கிறார்.ஜோஹன்னாவின் கணவர் ஜெர்ஹர்ட் குவாஸ் அவரின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 86 வயதில் அவர் மரணம் எய்த தற்போது பேரன், பேத்திகளுடன் ஜிம்னாஸ்டிக்கிலும் நேரம் செலவழித்து போட்டிகளிலும் அசத்துகிறார் ஜோஹன்னா. இவரை ஜெர்மன் பத்திரிகைகள் ‘ஜிம்னாஸ்டிக் கிராண்ட்மா‘ (ஜிம்னாஸ்டிக் பாட்டிம்மா) எனச் செல்லமாக அழைக்கிறார்கள். தன்னுடைய உணவும், வாழ்க்கை முறையுதான் தான் உறுதியாக இருக்கக் காரணம் என்கிறார் ஜோஹன்னா.
– கவின்

You may also like

Leave a Comment

17 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi