சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான பி.எஸ்சி., பட்டதாரி பெண். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், விடுமுறையில் நேற்றுமுன்தினம் ஊருக்கு வந்துள்ளார். தனியாக வீட்டில் இருந்த அவரை அதேபகுதியை சேர்ந்த கவிதாசன் (25), அவரது நண்பர்கள் திவாகர் (27), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரும் கடத்தி சென்று கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்ததுடன், மொபைலில் படம் பிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக எஸ்.பி., ஆசிஷ் ராவத், ஒரத்தநாடு ஏஎஸ்பி சகுனாஸ் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினர்.