சென்னை: அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு மற்றும் கருணை வேலை கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மருத்துவர்கள் கோரி வருகின்றனர். உயிர்காக்கும் பணியில் உள்ள தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், கொரோனா காலத்தில் பணி செய்யும் போது உயிரிழந்த 9 மருத்துவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.