சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அறிவிப்பு: 2023 டிசம்பர் மாத துறை தேர்வுகளுக்கான அறிவிக்கையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 26ம் தேதி (நேற்று) பிற்பகல் 11.59 மணி என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக அத்துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 31ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.