சென்னை: அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் முறைப்படி விலைப்பட்டியல், அனைவருக்கும் தெரியும் படி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்க என மத்திய அரசின் வழக்கறிஞர்கள் குழுவுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. விலைப்பட்டியல் வெளியே தெரியும் படி வைக்க கடை ஊழியர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டு என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் முறைப்படி விலைப்பட்டியல் அனைவருக்கும் தெரியும் படி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசின் வழக்கறிஞர் குழு ஆய்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவு தெரிவித்துள்ளது. அதுபோக விலை பட்டியல் வெளியே தெரியும்படி வைக்காவிட்டால் கடை ஊழியர்கள் மீது சட்ட முறைப்படி நடவடிக்கை எடுக்கவேண்டு எனவும் இந்த உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி தொடர்பாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை பட்டியல் வெளியே தெரியும் படி வைப்பது குறித்து உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை நடைமுறை படுத்தாது ஒன்றிய மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு இதுவாகும், இந்த வழக்கில் ஏற்கனவே தமிழகத்தில் மதுபானம் அருந்துவோர் எண்ணிக்கை ஓராண்டாக அதிகரித்து வருகிறது மேலும் 21 வயதுக்கு கீழ் உள்ள எதிர்கால இளைஞர்கள் மதுப்பழக்கத்துக்கு அலகுகின்றது மது சமுதாயத்தை சீரழித்து வருகிறது, எனவே தமிழகத்தில் மது விற்பனை நேரம் பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரை குறைக்க வேண்டும் இதேபோல 21 வயதுக்கு உட்பட்டோர்களுக்கு மது விற்பனை செய்யும் வகையில் அவருக்கு உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யபப்ட்டிருந்தது.
அந்த வழக்கை நீதிபதிகள் அமர்வில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர். பிறப்பித்த உத்தரவை எல்லாம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை ஆகவே உத்தரவை நிறைவேற்றாத ஒன்றிய மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுந்தர், பரத் சக்கரவாதி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபொழுது டாஸ்மாக் கடைகளில் வெளியே விலை பட்டியல் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசின் வழக்கறிஞர்கள் நாளை ஆய்வு செய்ய வேண்டும் அவ்வாறு விலைப்படியால் இல்லாத டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களை சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் இது குறித்து நாளை மறுநாள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.