சென்னை: தமிழக அரசு பேருந்து விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைந்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு 546 அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்துகளில் 598 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 481 பேருந்துகள் விபத்துள்ளானது. அதில் 554 பேர் உயிரிழந்தனர். அரசு பேருந்துகளால் விபத்துக்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒட்டுநர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுகின்றனர். நீண்ட தூரம் இயக்கப்படும் பேருந்துகளின் ஒட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அடிக்கடி விபத்து நடைபெறும் பகுதிகளில் அபாய எச்சரிக்கை பலகை வைப்பது போன்றவை செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதே எங்கள் நோக்கம். இவ்வாறு அவர்கள் கூறினர்.