சென்னை: அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக உள்ளதாக வந்த நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை செப்டம்பர் 12-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாப்கின் இயந்திர பராமரிப்பு பற்றி 2016-ல் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.