சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக ஆளுநர் விருதுகள் 2025- ம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரண்டு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்க இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நிறுவனங்கள் பிரிவில் தேர்தெடுக்கப்படும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசும், விருதும் மற்றும் தனிநபர் பிரிவில் தேர்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும், விருதும் குடியரசு தின நாளன்று வழங்கப்படும். விண்ணப்பங்களை, https://tnrajbhavan.gov.in இணையதளத்தில் பூர்த்தி செய்து, <mail to:rajbhavan twoawards2025@gmail.com > என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் மென் நகலை அனுப்பிவைக்க வேண்டும்.
ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
0