மீனம்பாக்கம்: கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். கவர்னருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர்.
தமிழ்நாடு கவர்னர் ரவி ஏற்கனவே, கடந்த வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு நாள் பயணமாக திடீரென புறப்பட்டு சென்றார், அன்று இரவே விமானத்தில் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் இன்று காலை 8.55 மணிக்கு மீண்டும் 4 நாட்கள் பயணமாக, சென்னையில் இருந்து டெல்லி செல்லும் கவர்னர் ரவி, வரும் 4ம்தேதி மாலை 3.10 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
கவர்னரின் திடீர் டெல்லி பயணம் குறித்து, அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால் ஒரே வாரத்தில் 2வது முறையாக 4 நாட்கள் பயணமாக டெல்லி செல்வதால், ஒன்றிய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை கவர்னர் ரவி சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.