சென்னை: 4 நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கு ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் அனைத்து மாநில கவர்னர்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக, கவர்னர் ஆர்என் ரவி நேற்று காலை 9.50 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர்.
டெல்லி சென்றுள்ள கவர்னர் ரவி, கவர்னர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரையும் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது. தனது 4 நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு, வரும் 4ம் தேதி பகல் 12.40 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் அவர் சென்னை திரும்புகிறார்.