சென்னை : அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ் மொழியை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,”தமிழ் பத்திரிகைகளை வாசிக்கிறேன்; யாராவது தமிழில் பேசினால் புரிந்துகொள்கிறேன். தமிழ் மொழி அழகான, சக்திவாய்ந்த மொழி; அதை கற்றுக் கொண்டு இருக்கிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.