சென்னை: ஆளுநர் ரவி கூறுவது வடிகட்டிய பொய் என முத்தரசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்கு பதில் அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி – தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை “பக்தி சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன்” என்று கூறி தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்து வரும் முயற்சிகள் என சில தகவல்களை தெரிவித்துள்ளார். இந்தி மொழி வெறியை வெளிப்படுத்தியதை மறைத்து முதலமைச்சர் மீது எதிர் குற்றச்சாட்டு ஆளுநர் கூறுவது பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும். எதிர்மறை அணுகுமுறையை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் ரவி கூறுவது வடிகட்டிய பொய்: முத்தரசன் விமர்சனம்
0
previous post