Wednesday, February 21, 2024
Home » அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் தலைவரை கைது செய்ய ஆளுநர் உத்தரவு: தீவிரவாத தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் தலைவரை கைது செய்ய ஆளுநர் உத்தரவு: தீவிரவாத தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்

by Ranjith

கொல்கத்தா: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் தலைவரை உடனடியாக கைது செய்து தீவிரவாதிகளுடனான அவரது தொடர்பு குறித்து விசாரிக்க மேற்கு வங்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த ரேஷன் பொருள் விநியோக முறைகேடு தொடர்பாக சோதனை நடத்த வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலிக்கு வந்த 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஷாஜஹான் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்பதால் அமலாக்கத் துறை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டது. இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ஷாஜஹான் வெளிநாடு தப்பி சென்றிருக்க கூடும் என்று கவலை தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், அவரது இருப்பிடத்தை கண்டறிந்து உடனடியாக கைது செய்து தீவிரவாதிகளுடனான தொடர்புகள் குறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘ஷாஜஹானுக்கு காவல்துறை அதிகாரிகளின் துணையுடன் சில அரசியல் தலைவர்கள் ஆதரவளிப்பதாக ஆளுநர் மாளிகைக்கு புகார் வந்தது. இதையடுத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்யும்படி காவல்துறை தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த கருத்துக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

* ஆளுநர் அரசு நடத்த கூடாது
ஆளுநரின் கருத்துக்கு பதிலளித்த திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், “அவரது கருத்துக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. அரசியலமைப்பின்படி, ஆளுநர் மாநில அரசுடன் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும். எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல் அவர் எப்படி இதுபோன்ற கருத்துகளை கூற முடியும்? அவர் ஒன்றும் மாநில அரசுக்கு இணையான அரசு நடத்த இங்கு வரவில்லை,’’ என்று கூறினார்.

You may also like

Leave a Comment

3 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi