சென்னை: நாளை நீங்களும் ஆளுநராகலாம் என நயினார் நாகேந்திரனை பார்த்து சபாநாயகர் கூறியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. ஆளுநர் பற்றி பேசக்கூடாது எனக் கூறி விட்டு எம்எல்ஏக்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று நயினார் தெரிவித்தார். ஆளுநருடைய நடவடிக்கை குறித்துதான் பேசினார்களே தவிர ஆளுநர் குறித்து உறுப்பினர்கள் பேசவில்லை என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.