Tuesday, April 16, 2024
Home » ஆளுநர் ரவி, அண்ணாமலை வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஆதீனத்திடம் ரூ.50 கோடி கேட்டு பாஜ மிரட்டியது மகா கேவலம்: கே.பாலகிருஷ்ணன் பளார்… பளார்…

ஆளுநர் ரவி, அண்ணாமலை வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஆதீனத்திடம் ரூ.50 கோடி கேட்டு பாஜ மிரட்டியது மகா கேவலம்: கே.பாலகிருஷ்ணன் பளார்… பளார்…

by MuthuKumar

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என, உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை அளித்து வாதாடிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தருமபுரம் ஆதீனமிடம் பாஜவினர் ₹50 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் மிகவும் கேவலமானது. இதில், பாஜவினருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் ரவி, அண்ணாமலை ஆகியோர் வாய் திறக்காமல் இருப்பது ஏன்?.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜ சார்பில் 198 வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டிற்கு ஒரு வேட்பாளரை கூட அறிவிக்கவில்லை. வேட்பாளர் கிடைக்கவில்லை போல. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜவுக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் செய்வதே எங்களது இலக்கு. இதுவரை உள்ள பாஜ தலைவர்கள், அண்ணாமலையை போல் தரம் தாழ்ந்த அரசியல் செய்யவில்லை. அண்ணாமலை அரசியல் அனுபவமே இல்லாமல் பேசுகிறார். கூட்டணியை கூட உருவாக்க முடியாத அண்ணாமலை, தென் மாவட்டங்களில் திமுக வெற்றி பெறாது என்று கூறுவது பகல் கனவு. பாஜ தமிழகத்தில் வருவது கூட பகல் கனவு தான். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிக வலுவாக உள்ளது. கடந்த 2 தேர்தலை விட கூடுதலான வாக்குகள் பெற்று, மிக பிரமாண்டமான முறையில் வெற்றி பெறும்.

தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதால், தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் ஏற்படுகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும். குஜராத் துறைமுகத்தில் ₹30 லட்சம் கோடிக்கு மேல் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அண்ணாமலை, மோடியை மட்டும் அடிக்கடி அழைத்து வந்து படம் காட்டுகிறார். எத்தனை முறை மோடியை அழைத்து வந்தாலும், தமிழகத்தில் பாஜ வெற்றி பெறாது. இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

5 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi