சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துள்ளார். தேசிய பாதுகாப்பு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.