சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்துசெய்ய வேண்டும் எனவும் கருணை அடிப்படையில் பணி கோரி பதிவு செய்துள்ள 1,087 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.