சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மத்தியபிரதேசத்தில் 50,000 போலி அரசு ஊழியர்கள் தொடர்பான ரூ.230 கோடி ஊழல் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல் விவகாரம், மாநில பாஜ அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுபோன்ற ஊழல் நிர்வாகத்தால், மத்தியபிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கியுள்ளது. அமலாக்கத்துறை, (ஈடி) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) போன்ற அமைப்புகள் விசாரணை செய்ய ஒன்றிய அரசு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களின் பெயரில் ரூ.230 கோடி ஊழல் மபி பாஜ அரசின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
0