ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டு, முதல் போக பாசனத்திற்கு 16.06.2025 முதல் 13.10.2025 வரை 120 நாட்களுக்கு, 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள, பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15743 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு படுகை மூன்றாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 94362 ஏக்கர் நிலங்களுக்கு ஐந்து (5) சுற்றுகள் 29.01.2025 முதல் 13.06.2025 முடிய 135 நாட்களுக்குள் உரிய இடைவெளிவிட்டு, 10300 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, மேலும், பாசன காலத்தை 14.06.2025 முதல் 05.07.2025 முடிய 22 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.