பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக விவசாயம் செய்வதற்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45041 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து 15.06.2025 முதல் 12.10.2025 வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை வட்டம் மற்றும் மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி வட்டம் மற்றும் மதுரை வடக்கு வட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசன திட்டத்தின் கீழுள்ள இராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு 16.06.2025 முதல் 31.10.2025 வரை 138 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப கோதையாறு பாசன திட்ட அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I மற்றும் சிற்றார் II அணைகளின் தண்ணீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள (கோதையாறு பாசனத்திட்ட இராதாபுரம் கால்வாய் பாசனப் பகுதிகள்) 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.