சென்னை: தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு மனமில்லை என்று சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார். பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் மீது உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். தமிழ்நாடு என்ற பெயரை கூட புறக்கணிக்கிறார் ஆளுநர். தேசம் பெற்ற சுதந்திரத்தை இழந்து விடுவோமோ என்ற 1949-ல் அம்பேத்கர் பேசியதை முதல்வரின் பேச்சு நினைவூட்டியது. 10 மசோதாக்களையும் திருப்பி அனுப்பும் தனித் தீர்மானத்தக்கு வி.சி.க ஆதரவு தெரிவிக்கிறது. அரசியல் அமைப்பு சாசனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை முதலமைச்சர் தைரியமாக எதிர்கொள்கிறார். அம்பேத்கர், பெரியார் , அண்ணா, கலைஞர், காமராஜர் பெயரை உச்சரிக்க ஆளுநருக்கு மனமில்லை என்று சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.