Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் 23 புதிய அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்: மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 7ம் தேதி சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகள் இயக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகளில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 27 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, முதல்வரின் உத்தரவுப்படி, போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தல்படி, நேற்று முதல் 23 புதிய அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் மேற்படி பேருந்து சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.