சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ெசயலாளர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட அறிவிப்பு: அரசுப்பணியை எதிர்நோக்கி இருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக டிஎன்பிஎஸ்சி மூலமாக 17,595 காலிப்பணியிடங்கள் ஜனவரி 2026க்குள் நிரப்பப்படும் அரசு என ஜூன் 2024ல் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அறிவித்திருந்தது. தேர்வர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவுப் பணிகளை துரிதப்படுத்தி, ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப 17,702 இளைஞர்களை தெரிவு செய்துள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசு ஜனவரி 2026 வரை நிர்ணயித்த இலக்கை தேர்வாணையம் 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கூடுதலாக 2500 மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப தெரிவுப்பணிகள் நடந்து வருகிறது.
அரசு துறை காலி பணியிடங்களுக்கு ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் தகவல்
0